கோவை வ.உ.சி மைதானத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை வ.உ.சி மைதானத்தில் இன்று மாலை கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நெடுவாசல், கதிராமங்கலம் பகுதிகளில் விவசாயிகள் மேற்கொள்ளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் வ.உ.சி மைதானத்திற்கு விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை உடனடியாக கலைந்து செல்லும்படியும் இல்லையெனில் கைது செய்வதாக எச்சரித்தனர்.
காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் அவர்களை காவல் துறையினர் கைது செய்ய முயன்றனர்.
அப்போது அப்போது இளைஞர்கள் எழுந்தவுடன் அவர்களை காவல்துறையினர் விரட்டிச்சென்று கலைத்தனர். கலையாமல் நின்று கொண்டு இருந்த பெண்கள் உட்பட 14 பேரை காவல் துறையினர் கைது செய்து ரேஸ்கோர்ஸ் காவல்நிலையம் அழைத்து சென்றனர். இதனையடுத்து வ.உ.சி மைதானத்தில் பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்காக போராடியதை போல இளைஞர்கள் நெடுவாசல், கதிராமங்கலம் விவகாரங்களுக்காக ஓன்று சேர்ந்து விடக்கூடாது என்பதால் முன் கூட்டியே காவல் துறையினர் போராட்டங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.