கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 88-வது வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும் ஆய்வு செய்தார். பின், குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் தயார் செய்யப்படும் உணவுகள் தரமாக உள்ளதா என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, பாலக்காடு நெடுஞ்சாலையில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மேல்மட்ட நடைபாதை அமைக்கும் பணிகளையும், குனியமுத்தூர் பகுதியில் பொது ஒதுக்கீட்டு இடத்தில் ரூ.42 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நகர்நல மையம், அரசு அலுவலர் குடியிருப்பை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.