பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் மற்றும் உறிஞ்சுவான்களுக்கு 12 சதவிகிதம் சரக்கு மற்றும் சேவை வரி விதித்த மோடி அரசிற்கு கண்டனம் தெரிவித்தும், நாப்கினுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வலியுறுத்தியும் இன்று புரட்சிகர இளைஞர் முன்னணியின் சார்பில் மோடிக்கு நாப்கின் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

கோவை, ரயில் நிலையம் அருகில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் திரளானோல் பங்கேற்று மக்கள் விரோத பாஜக மோடி அரசினைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு நாப்கின் அனுப்ப முயன்றனர்.

இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் புரட்சிகர இளைஞர் முன்னணியினைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.