கோவை ரயில் நிலையத்திலிருந்து தினமும் ஏராளமான பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு வருவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ரயில் நிலைய பிரதான வாசல் அருகே சிறிய விநாயகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இதன் அருகே ரோந்து பணி காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டிருப்பர்.
இந்நிலையில் இன்று அதிகாலை சந்தேகத்திற்கு இடமான வகையில் கோவில் வாசலில் அமர்ந்திருந்த நபர் குச்சியில் பப்புள் கம் ஒட்டி உண்டியலில் இருந்த பணத்தை திருட முயன்றார். இதனைக் கண்ட பொதுமக்கள் அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவரது பெயர் சிங் என்றும், புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.