கோவைபுதூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் கிளீனிக் நடத்தி வந்தவர் அருள். இவர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் கிளீனிக் நடத்தி வந்து நிலையில் அவர் மீது சுகாதாரத் துறை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் வந்தன. அதனைத்தொடர்ந்து, இன்று சுகாதாரத் துறை இணை இயக்குனர் கண்ணன் தலைமையில் அருளின் கிளீனிக்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையில் இவர் ரஷ்யாவில் மருத்துவர் படிப்பு படித்துள்ளதும் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் நடத்தப்படும் வெளிநாடு மருத்துவ மாணவர்களுக்கான பட்டதாரி தேர்வில் தோல்வி அடைந்ததும் தெரியவந்தது. தற்போது, சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.