தள்ளாடும் தமிழகம்..! மதுவே காரணம்..!


மதுக் கலாச்சாரத்தால் உடல்ரீதியாகவும், உள்ளரீதியாகவும், சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்படும் தாக்கங்களையும் பாதிப்புகளையும் அதிர்ச்சியுடன் ஆராய்ந்து பார்த்தோமானால் மிக முக்கியமான ஒரு பிரச்சனையாக தெளிவுபெறுவது அரசுக்கான வருமானம்.

டாஸ்மாக் வருமானத்தை நம்பித்தான் தமிழக அரசு இருக்கிறது. அந்த வருவாய் நின்று விட்டால், மக்கள் பணிகளை எப்படி நிறைவேற்றுவது என்பதே தமிழக அரசின் கவலை. "நாங்கள் குடிப்பதை நிறுத்திவிட்டால் நீங்கள் சாப்பிடவே முடியாது" என்று குடிமகன்கள் சிலர் குடிக்காத மகன்களை நோக்கி கிண்டல் அடிக்கும் அளவுக்கு அதனுடைய வருமானம் இந்த ஆட்சிக்கு முக்கியமாகிவிட்டது.

தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என்று நினைக்கும் கட்சிகளும் அமைப்புகளும் டாஸ்மாக் வருவாய்க்கு மாற்றாக நிறையத் திட்டங்களை பரிந்துரைத்து வருகின்றன. 

ஒரே நாளில் மதுவிலக்கைக் கொண்டுவர இயலாது என்றாலும்கூட சிறிது மாற்றங்களின் மூலம் மதுபோதையில் மூழ்கியுள்ளோரை மீட்டெடுக்க முடியும். ஆனால், இங்கோ மதுபோதையில் தமிழகம் தத்தளித்து வருகிறது.

ஒரு தனி மனிதன் தள்ளாடும்போது, ஒரு குடும்பம் தள்ளாடுகிறது. ஒரு குடும்பம் தள்ளாடும்போது, ஒரு சமூகம் தள்ளாடுகிறது. ஒரு சமூகம் தள்ளாடும்போது, ஒரு நாடே தள்ளாடுகிறது. தமிழகம் அப்படி ஒரு தள்ளாட்டத்திலேயே உயிர்வாழ்ந்து வருகிறது என்பதே இங்கு நிதர்சனமான உண்மை.

மதுவால் சீரழியும் தமிழகம்:-

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆட்டோ ஸ்டேன்ட் அருகில் முழு போதையில் இருந்த ஒருவர் பாலத்தின் சுவர் மீது அமர முயற்சி செய்கையில் தவறி கால்வாயில் விழுந்தார். 



நல்ல வேளை, அந்த கால்வாயில் குப்பை நிறைந்திருந்த காரணத்தில் சிறு காயங்களுடன் அந்த நபர் உயிர் தப்பினார். 



இதில் வேடிக்கை என்னவென்றால், வழக்கத்திற்கு மாறான ஒன்று நிகழும்போது அதை நம்மக்கள் வேடிக்கை பார்க்க என்றும் தவறுவதில்லை. அவ்வாறே கால்வாயில் விழுந்த நபரை வேடிக்கை பார்க்கவும் மக்கள் குவிந்தனர். இருப்பினும் அவரை மீட்க முட்படவில்லை.

பின் சிறிது நேரம் கழித்து துர்நாற்றம் தாங்காமல் மதுபோதை தெழிந்த அந்த நபரே, கால்வாயில் இருந்து மீண்டு வெளியேறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...