கோவையில் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் 320 கோடி மதிப்பில் புறவழி சாலை- நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு


கோவை, ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரை ரூ.168 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தடையின்மை சான்று கேட்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும், உடனடியாக 'டெண்டர்' கோரப்பட்டு பணிகள் துவக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.



அவிநாசி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது. ஒப்பந்தம் இறுதியாகும் நாளில் இருந்து, நான்கு மாதத்துக்குள் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பின், அரசுத் தரப்பில் நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்படுவர். ஓராண்டுக்குள் பாலம் கட்டுமான பணி துவக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை நகருடன் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலைகள் இணைகின்றன. ஆறு வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் நகருக்குள் நுழைந்து மற்றொரு பகுதிக்கு செல்வதால் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓரிடத்தை கடப்பதற்கு ஒரு மணி நேரம் வீணாகிறது. இதற்கு தீர்வு காண பல்வேறு இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்ட தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைகள் முடிவு செய்து ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளன. 



இதில், மேட்டுப்பாளையம் சாலை - சத்தி சாலை - அவிநாசி சாலை - திருச்சி சாலையை இணைக்கும் வகையில் அரைவட்ட சாலை ஏற்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முயற்சித்து வருகிறது. குனியமுத்துாரில் இருந்து மதுக்கரை, சுண்டக்காமுத்தூர், பேரூர், செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, பேரூர் மேற்கு சித்திரை சாவடி, கலிக்கநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம், வடவள்ளி, பன்னிமடை, குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டை அடையும் வகையில் ரூ.320 கோடியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு எந்தெந்த இடங்களில் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்கிறது என்கிற கள ஆய்வில் மாநில நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டு வருகிறது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...