கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் ரங்கநாதபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மற்றும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் டாக்டர்.அப்துல்கலாம் நினைவு நூலகம் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்களால் இன்று (18.07.2017) மாணவ, மாணவியர்களைக் கொண்டு தொடங்கி வைக்கப்பட்டது.

இதில், ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட டாக்டர்.அப்துல்கலாம் நினைவு நூலகத்தில் 8000-க்கும் மேற்பட்ட நூல்கள் வைக்கப்பட்டுள்ளது. ரங்கநாதபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட நூல்கள் வைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையர் நூலகத்தை திறந்து வைத்து மாணவர்களிடம் ஆற்றிய உரை, “மாணவ பருவத்தில் அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பாடப்புத்தகத்துடன் சேர்த்து நூலகத்திற்கு சென்று பிற புத்தகங்களை படிக்கும் பழக்கம் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது. தமிழ் மற்றும் ஆங்கிலம் நூலை படிக்கும் போது புரிந்து படிக்க வேண்டும். புரியாத வார்த்தைகளுக்கு அகராதியை பயன்படுத்தி அர்த்தம் புரிந்து படிக்க வேண்டும்.
வாசிப்பு பழக்கம் உங்களை பெரிதும் முன்னேற்றும். நீங்களும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு நூலகம் பெரிதும் உதவியாக இருக்கும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பள்ளிகளை மேம்படுத்த உள்ளோம். இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்கப்படும். ஆகவே, மாணவ செல்வங்களாகிய நீங்கள் நூலகத்தை முழுமையாக பயன்படுத்தி பயனுற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது மாநகராட்சி கல்வி அலுவலர் உமா, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப்பு வர்த்தக அலுவலர் ஸ்வாதி ரோகித், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இயக்குநர் ஐசக் கிறிஸ்டின் மோசஸ், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பரணிதரன், அபர்னா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.