கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள புறந்தரதாசர் மண்டபத்தில் வாய்ஸ் ஃபார் லைப் பெடேரேஷன் அறக்கட்டளையின் தொடக்க விழா நடைபெற்றது. அறக்கட்டளையின் அறங்காவலர் பேராசிரியர் ராஜசேகர் மற்றும் சிவக்குமார் ஆகியோர் விழாவினை துவக்கிவைத்தனர். விழாவில், எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில், முக்கிய நிகழ்வாக முதலில் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகையும் பின்பு நாளைய வரலாறு மற்றும் ஜன்னலில் வெளிவந்த ஆசிரியை பா.பிரபாவதி அவர்களின் குறுநகை பூக்கள் புத்தகம் வெளியிடப்பட்டது. அதனை எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் வெளியிட, சமூக ஆர்வலர் இளங்கோ பெற்றுக்கொண்டார். அடுத்தாக சமூக ஆர்வலர் மற்றும் ஆசிரியரான ரா.கனகராஜ்-யின் காணிக்கை புத்தகம் வெளியிடப்பட்டது. இதனை தன்னம்பிக்கை கவிஞர் கவிதாசன் வெளியிட, எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் மற்றும் பெரியமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர் இளம் சாதனையாளர்களுக்கான விருதை ஜகதீஷ்க்கு வழங்கப்பட்டது.

விழாவில், சிறப்பு விருந்தினரான எம்.ஏ.கே குரூப் தலைவர் அத்தப்ப மாணிக்கம் பேசுகையில், அடித்தட்டு மக்களுக்கு சுகாதாரமான மருத்துவம், அத்தியாவசியமான கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் கிடைத்திட வாய்ஸ் ஃபார் லைப் பெடேரேஷன் அறக்கட்டளையும் உதவவேண்டுமென வந்த அனைவரையும் வியக்கும்படி பேசினார். இறுதியில் அறங்காவலர் பேராசிரியர் ராஜசேகர் நன்றியுரை வழங்கினார்.