கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணப்ப நகர் பகுதியில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் மதுபானக்கடைகள் இயங்கி வந்த நிலையில் கடந்த வாரம் புதிதாக மேலும் இரண்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

ஏற்கனவே இயங்கி வந்த மதுபான கடைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து அதை அகற்ற கோரியுள்ள நிலையில் புதிதாக கடை திறந்ததைக் கண்டித்தும், அரசின் வருமானத்திற்கான புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும் இன்று பூங்கொத்து கொடுக்க அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னாள் மாமன்ற உறுப்பினர் மீனா லோகு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு வந்தனர்.
இதனைத்தொடர்ந்து, அவர்களைத் தடுத்த காவலர்கள் பொதுமக்கள் கொண்டு வந்த பூங்கொத்தை பறிமுதல் செய்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.