கே.எம்.சி.எச் ஆயுர்வேத மையத்தின் ஆடி மாத ஆயுர்வேத சிறப்பு முகாம்

கே.எம்.சி.எச் ஆயுர்வேத மையமும், கோவை ஆர்ய வைத்தியசாலையும் இணைந்து கடந்த 4 ஆண்டுகளாக, கே.எம்.சி.எச்  மருத்துவமனையின் 6-வது தலத்தில், ரிலாச் என்ற ஆயுர்வேத நல்வாழ்வு மையம் சிறப்பாக செயல்பட்டுவருகிறது.

அதனை தொடர்ந்து வரும் ஆடி மாதம் 5ஆம் ஆண்டின் துவக்கத்தை முன்னிட்டு மாபெரும் ஆயுர்வேத சிகிச்சை சிறப்பு முகாம் வரும் 18-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தினசரி காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதில் அனைத்து விதமான ஆயுர்வேத சிகிச்சைகளுக்கும் 20 சதவீத சிறப்பு சலுகை கட்டணத்தில் சிகிச்சைகள் வழங்கப்படும். 

கே.எம்.சி.எச். ஆயுர்வேத மையத்தில் (ரிலாச்) பாரம்பரிய கேரள ஆயுர்வேத சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டு வருகிறது. இச்சிகிச்சை மூலம் உடம்பு வலி, வாத பிரச்சனைகள், மூட்டு வலி, தோல் வியாதிகள், பொடுகு மற்றும் முடி கொட்டுதல், மன அழுத்தம், மாதவிடாய் பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள், சைனஸ் மற்றும் பல்வேறு பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு எற்படுகிறது.. மேலும் உணவு கட்டுப்பாட்டிற்கான ஆலோசனைகளும், இயற்கையான மூலிகை மருந்துகளும், ஆயுர்வேத சிகிச்சைகளும், ஆயுர்வேத மசாஜ்களும் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆயுர்வேத மூலிகை எண்ணெயால் மேற்கொள்ளப்படும் பல்வேறு மூலிகை மசாஜ் சிகிச்சை முறைகள் உள்ளன. இதன் மூலம் பல்வேறு உடல் பிரச்சனைகளும் சரி செய்யப்படுகின்றன. ஆயுர்வேத சிகிச்சை முறைகள் பின்வருமாறு

  • உடம்பு வலி, பயண சோர்வு, நீண்ட நேரம் அமர்வதால் வரும் சிரமம், கர்ப்ப காலத்திற்கு முன்னும், பின்னும் வரும் வலி ஆகியவற்றிற்கு தீர்வளிக்கும் ‘அப்யங்கம்’ மூலிகை மசாஜ் சிகிச்சை 
  • திடீர் மற்றும் நாள்பட்ட கழுத்து வலி, இடுப்பு வலி போக்கும் ‘பிச்சு’ மூலிகை சிகிச்சை 
  • திடீர் மற்றும் நாள்பட்ட இடுப்பு வலி நீக்கும் ‘கடி வஸ்தி’ மூலிகை சிகிச்சை 
  • பக்கவாதம் மற்றும் எல்லாவிதமான மூட்டுவலிகளுக்கும் தீர்வளிக்கும் ‘பிழிச்சல்’ மூலிகை சிகிச்சை
  • வறண்ட சருமம், இருண்ட சருமம், கருவளையம், நரம்பு தளர்ச்சி, முகத்தில் கருப்பு திட்டுகள் போக்கும் ‘நவர கிழி’ மசாஜ் சிகிச்சை
  • தலைவலி, கண் பிரச்சனைகள், நரம்பு பிரச்னை விலக்கும் ‘சிரோவஸ்தி’ மூலிகை சிகிச்சை 
  • மூட்டு விறைப்பு, தசை விறைப்பு, வலியுடன் உள்ள வீக்கம் போக்கும் ‘கிழி’ மூலிகை சிகிச்சை 
  • குறட்டை, தலைவலி, மூக்கடைப்பு போக்கும் ஆவி பிடித்தல் மற்றும் ‘நஸ்யம்’ சிகிச்சை 
  • தூக்கமின்மை, கடினமான மன அழுத்தம், தலைவலி, ஒற்றை தலைவலி, கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீக்கி, நல்ல தூக்கத்தை தூண்டும் ‘சிரோதாரா’ மூலிகை சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகள் உள்ளன.


இத்தகைய சிகிச்சைகள் நோயாளியின் பிரச்னைகளுக்கேற்ப ஒரு நாளோ, சில நாட்களோ குறிப்பிட்ட நேரம் எடுத்துக்கொண்டால் நிவாரணம் கிடைக்கும். இதில் பெரும்பாலானோர் சிகிச்சை பெற்று குணம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இம்மையத்தில் கர்கிடகம் (ஆடி) மாதத்தை முன்னிட்டு வரும் 18ம் தேதி முதல் 30ம் தேதி வரை சிறப்பு சிகிச்சை முகாம் நடக்கிறது. இதில் உடல் மற்றும் மன வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும்  அனைத்து ஆயர்வேத சிகிச்சைகளுக்கும் 20 சதவீத சிறப்பு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கும், பரிசோதனைக்கான முன் பதிவிற்கும் கே.எம்.சி.எச். ஆயுர்வேத நல்வாழ்வு மையம், ரிலாச், 6வது தளம், கே.எம்.சி.எச்.மருத்துவமனை, அவினாசி ரோடு, கோயம்புத்தூர், போன் : 0422 4324620, 4324632 மொபைல் : 733 9333 485. இ-மெயில்: [email protected] ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...