மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியப் பகுதிகளில் அதிகப்படியான மழை பெய்ய வாய்ப்பு

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலை பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னையின் காலநிலை இனிமையாக இருக்கிறது. மேக மூட்டத்துடன் இருக்கிறது. எப்போதாவது சிறு தூறல்கள் வரலாம். வார கடைசியில் ஊர் சுற்றுவதற்கு ஏற்ற கால நிலை இது.

ஜூன் மாத கடைசி வாரத்தில் பெய்த மழைக்கு பிறகு நீலகிரி மற்றும் கோவை மலை பகுதிகள் மழை பெறாமல் அமைதியாக இருந்தன. இப்போது வெளியே தெரியாத அளவிற்கு மிதமான மழையை இந்த இரண்டு பகுதிகளும் பெற்று வருகின்றன. வரும் 19-ம் தேதியில் இருந்து மழையின் வேகம் அதிகரிக்க தொடங்கும். 2-3 நாளைக்கு பெய்யக் கூடும். தமிழ் நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழையை எதிர் பார்க்கலாம். 

தமிழக மலை பகுதிகளில் பெய்த மழை விவரங்கள். mm கணக்கில் 14.07.2017 காலை 8.30 வரை பெய்த விவரங்கள்:

நீலகிரிக்கு உட்பட்ட பகுதியில் மழை விபரம்

  • எமரால்டு - 80
  • கிளென்மோர்கன் - 29
  • மேல் பவானி - 28
  • அவலான்ஜி - 25
  • கூடலூர் பஜார் - 21
  • நடுவட்டம் - 20
  • கேத்தி - 18
  • முக்குறுத்தி - 17
  • பார்ஷன்ஸ் வேளி - 16
  • பைகாரா - 13
  • கோத்தகிரி - 10
  • உதகை - 10
  • குந்தா பாலம் - 10
  • சந்திநல்லா - 10
  • போத்திமுன்டு - 10


கோவைக்கு உட்பட்ட பகுதியில் மழை விபரம்

  • பரம்பிக்குளம் அணை - 45
  • வால்பாறை தாலுகா அலுவலகம் - 40
  • சோலையார் அணை - 38
  • வால்பாறை பிடிஓ - 34
  • சின்ன கல்லார் - 30
  • சிறுவாணி அணை - 27
  • துனகடவு - 25
  • மானாம்பள்ளி - 23
  • பொள்ளாச்சி - 13
  • கோத்தகிரி - 11
  • அடிவாரம் - 10


சென்னையை பொறுத்த வரையில் சிறு தூறல்கள் ஏற்படலாம். மற்றும் உதகை மாதிரியான கால நிலை நிலவுகிறது. இடியுடன் கூடிய மழைக்கு நாம் காத்து இருக்க வேண்டும்.

சென்னையில் இப்போது இடியுடன் கூடிய மழையை எதிர் பார்க்க வேண்டாம். இருண்ட வானத்துடன் மேக மூட்டத்துடன் இருக்கும். ஆனால் சென்னையின் தெற்கு பகுதியில் இருந்து பாண்டி மற்றும் கடலூர் பகுதி வரை மழை வரலாம்.

தமிழ் நாட்டின் இதர பகுதிகள்

டெல்டா மாவட்டங்களை ஒரு பகுதியில் குறிப்பாக திருவாரூர் மாவட்டத்திலும் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் கிட்டத்தட்ட உறுதியான மழையை இன்று எதிர் பார்க்கலாம். வட மேற்கு உள் மாவட்டங்களில் மிதமான மழையை உறுதியாக எதிர் பார்க்கலாம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் சில பகுதிகளில் தூறல்கள் அல்லது மிதமான மழையை எதிர் பார்க்கலாம். கடலூரில் இருந்து டெல்டா மாவட்டங்கள் வரை உள்ள பகுதிகளும் மழை பெற வாய்ப்பு உண்டு.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...