பூச்சிநோய் கண்காணிப்பு குறித்து வேளாண்மைப் பல்கலை சார்பில் விவசாயிகளுக்கு அறிவுரை

நெற்பயிரில் இலைச்சுருட்டு புழு மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதல் தர்மபுரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவள்ளுர், ஈரோடு, கடலூர், திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த விளக்குப் பொறிகளை அமைத்து அந்திப் பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். 

பூச்சிகளின் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீத கரைசலை தயாரித்து பயிர்கள் மீது தெளிக்கலாம். 

மேலும் நாற்றங்கால் மற்றும் நடுவு செய்த வயல்களில் இலைப்பேனை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீத கரைசலை தயாரித்து பயிர்கள் மீது தெளிக்கலாம்.

சேலம், தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பருத்தியில் ஒரு சில இடங்களில் வெள்ளை ஈ தாக்குதல் காணப்படுகிறது. மக்காச்சோளத்தை பருத்தி வயலை சுற்றி பயிரிடும்பொழுது சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு தடுப்புப் பயிராக அமைகிறது. வயல் வரப்புகளில் தட்டைப் பயிரை ஒரப்பயிராகப் பயிரிட்டு நன்மை செய்யும் பொறி வண்டு கிரைசோபிட் உள்ளிட்ட பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

உதிர்ந்த சப்பைகள், பூக்கள் மற்றும் காய்கள் ஆகியவற்றை கையால் பொறுக்கி அழிப்பதன் மூலம் பூச்சிகளின் பெருக்கத்தைக் குறைக்க முடியும். மஞ்சள் நிறம் பூசப்பட்ட தகர டப்பாவின் மேல் ஆமணக்கு எண்ணெய் அல்லது கிரீஸ் தடவி ஏக்கருக்கு 10 என்ற விகிதத்தில் வைத்து வெள்ளை ஈ மற்றும் தத்துப் பூச்சியின் அந்து பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த மெட்டலாக்சில் மற்றும் மேன்கோசெப் மருந்து 2.5 கிராம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு கலந்து தெளிக்கவும். வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் மேலாண்மை பருவமழை மேலும் தாமாதமானால் வறட்சி தொடர வாய்ப்புள்ளது. அவ்வாறான சூழ்நிலையில் சாறு உறுஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, இலைப்பேன், வெள்ளை ஈ, சுருள் வெள்ளை ஈ மற்றும் பலவகையான மாவுப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக வாய்ப்புள்ளது.

இவற்றை மஞ்சள் ஒட்டும் பொறி வைத்து (5 பொறி, ஏக்கருக்கு) கண்காணிக்கவும். தேவைப்படின் வேப்பங்கொட்டைச்சாறு 5 சதம் அல்லது மீன் எண்ணைய் சோப் 1 கிலோ 40 லிட்டர் தண்ணிரில் கலந்து தெளிக்கவும்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...