டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையல் தலைமையில் ஆலோசணைக் கூட்டம்


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் இன்று மாநகராட்சி கூட்டரங்கில் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் தடுப்பு தொடர் நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மழைக்காலம் துவங்கி விட்ட காரணத்தினால் கேரளா உள்ளிட்ட அருகாமையில் உள்ள மாநிலங்களிலிருந்து டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவும் சூழல் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இக்கூட்டத்தில் மண்டலம் வாரியாக ஒவ்வொரு வார்டு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சல் உள்ளிட்ட விபரங்களை கேட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக மாநகராட்சி ஆணையரால் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பின்வரும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.

கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணிக்கு தினமும் காலை செல்லும் முன்பாக அவர்களுக்கு பணிசெய்யும் முறை குறித்து எடுத்துரைக்க மண்டல சுகாதார அலுவலர்களுக்கு, சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. 

டெங்கு பாதித்த இடங்களில் கல்லூரி மாணவ மாணவியர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளில் தொடர்ச்சியாக கொசு உற்பத்தி காரணிகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள குடிநீர் தொட்டிகள், குடிநீர் வடிகட்டும் இயந்திரங்கள், டிரம்கள், சிண்டெக்ஸ் ஆகியவற்றையும் முறையாக சுத்தப்படுத்தவும், அனைத்து (ழுர்வு)  நீர் தேக்கத் தொட்டிகளில் குளோரின் உரிய அளவில் இருப்பதை சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து மண்டல உதவி ஆணையாளர்களும், மாநகர நல அலுவலரும் முறையாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறதா என்று கண்காணிக்கும் பணி மேற்கொள்ள வேண்டும். மேலும், டெங்கு அதிகமாக பதிவாகும் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் அவர்களால் எச்சரிக்கப்ட்டது.

டெங்கு காய்ச்சல் வந்தால் சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டாம். போலி மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்ல வேண்டாம். தொடர்ச்சியாக காய்ச்சல் இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள அரசு சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். தொட்டிகளை பீளிசிங் பவுடர் கொண்டு வாரம் ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக கொசு ஒழிப்பு பணிக்கு பொது மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.

ஆணையரின் தலைமையில் நடைபெற்ற இவ்வாய்வு கூட்டத்தில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, மண்டல சுகாதார அலுவலர்கள், அனைத்து சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...