கோவை வெரைட்டி ஹால் பகுதியை அடுத்த சுலைவன் வீதியைச் சேர்ந்தவர் காசில் அலி (32). இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் 14 வயத்திற்குட்பட்ட குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்தியதாக போலீசாருக்கு புகார் வந்தது.
இதை தொடர்ந்து, நேற்று காசில் அலி-யின் நகை பட்டறைக்கு சென்ற வெரைட்டி ஹால் போலீசார் அங்கு பணிபுரிந்து வந்த மேற்குவங்காளத்தை சேர்ந்த கார்த்திக் பவுரி என்ற 14 வயது சிறுவனை மீட்டனர்.
தொடர்ந்து, குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் காசில் அலி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.