ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15ம் தேதி இளைஞர் திறன் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூலை 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை திறன் வாரமாக கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட மாணவ, மாணவியர்களும், இளைஞர்களும் திறன் பயிற்சி பெறுவதன் மூலம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள உதவிடும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இவ்வாரத்தில் பல்வேறு நிகழ்ச்சியை மாவட்ட வேலைவாப்பு அலுவலகமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
முதல் நாள் நிகழ்ச்சியாக 10ம் தேதியன்று (நாளை) மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் திறன் பயிற்சி குறித்து விரிவாக விளக்கப்பட்டு, திறன் பயிற்சிக்கான பதிவுகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறந்த எதிர்காலம் அமைய திறன்பயிற்சி என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி வினா, ஓவியப் போட்டி ஆகியன நடத்தப்பட்டு அதில் வெற்றிபெறுபவர்களுக்கு நிகழ்ச்சியின் இறுதிநாளான ஜூலை 15ம் தேதியன்று மாவட்ட ஆட்சியரால் பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாரத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் திறன் விழிப்புணர்வு குறித்து ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. திறன் பயிற்சி குறித்து விரிவாக அறியவும், பதிவு செய்யவும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தையும் நேரில் அணுகி பயனடையலாம். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி திறன் பயிற்சி பெற்று பயனடையுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.