தமிழகத்தில் உள்ள எண்ணை வளத்தை சுரண்டும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தையும் மத்திய அரசையும் கண்டித்து கோவையில் முற்போக்கு அமைப்புகள் சார்பாக நடத்தப்பட்ட ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிரமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை அகற்றிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறை தடி அடி நடத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து , ஊருக்குள் காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
கதிராமங்கலத்தில் போராட்டதில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் , உள்ள முற்போக்கு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கதிரமங்கலத்தில் இருக்கும் காவல்துறை மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கிராமத்தில் இருந்து அகற்ற கோரியும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். மத்திய அரசும், ஓ.என்.ஜி.சி நிறுவனமும் தமிழகத்தின் எண்ணை வளங்களை சுரண்ட முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினர். அனுமதியின்றி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.