கதிராமங்கலம் மக்கள் மீதான தடியடிக்கு தமிழக முதலமைச்சரின் பதில் பொறுப்பற்றதாக உள்ளது- நாம் தமிழர் சீமான்


கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-



கதிராமங்கலத்தில் போராடிய பொது மக்கள் மீது காவல் துறை தடியடி நடத்திய விவகாரத்தில் தமிழக முதலமைச்சரின் பதில் பொறுப்பற்றதாக உள்ளது. வாழ்வாதார பிரச்சனைகளுக்காக போராடும் மக்களுக்கு அரசு துணை நிற்காமல் நேர் எதிராக செயல்படுகின்றது. கதிராமங்கலத்திற்குள் தங்களை நுழைய விடவில்லை என்றாலும் மற்ற இடங்களில் நாங்கள் போராடுவோம். பொது கூட்டங்களில் இதுகுறித்தான கோரிக்கைகளை முன்வைப்போம்.

ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்பட்டு வேலை நிறுத்தம் மேற்கொண்டு வரும் திரையரங்க உரிமையாளர்களின் பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டிடிஎச் மூலம் திரைப்படங்களை  தமிழக அரசே முன்நின்று வெளியிட வேண்டும். டிடிஎச் மூலம் படங்கள் வெளியிட்டால் அதில் பல முறைகேடுகள் அதிகரிக்க வாய்ப்பிருக்கின்றது. ஏற்கனவே இயக்குனர் சேரன் முயற்சித்தும் இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

கொடநாட்டில் நடைபெறும் சம்பவங்கள் திகில் படம் போல் போய்க்கொண்டு இருக்கிறது. பத்திரிகைகளில் படிக்க சுவாரஷ்யமாக இருக்கிறது. மேலும், ஜெயலலிதா இருந்த போது இருந்ததை விட தற்போது தமிழக அமைச்சர்கள் சிறப்பாக செயல்படுகின்னர். பொது வெளியில் தைரியமாக பேசுகின்றனர்."

இவ்வாறு நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...