கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மின்மோட்டர் பொருத்திய தையல் இயந்திரங்களை வழங்கினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்றைய தினம் (ஜூலை 3) மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.38 ஆயிரம் மதிப்பில் மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், துணை ஆணையர் (கலால்) பாலகிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலர் சுரேஷ், ஆதி திராவிட நல அலுவலர் மோகன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.