ஓய்வுபெற்ற மாநகராட்சி பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.



மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் கே.சி.கிரேஸி (நகர சுகாதார செவிலியர்), து.மகாலட்சுமி (சமுதாய அமைப்பாளர்), 13 தேர்ச்சி திறனற்ற பணியாளர்கள் மற்றும் 33 துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்களுக்கு, சால்வை அணிவித்த மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஓய்வுப் பலன்களாக ரூ.2 கோடி மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் (நிர்வாகம்) செந்தில்குமார் ரத்தினம், மத்திய மண்டல உதவி ஆணையர் (பொ) என்.அண்ணாதுரை மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...