பத்தாம் வகுப்பு தமிழ் பாட நூலில் பொற்கொல்லர் சமூகத்தை இழிவு படுத்தும் விதத்தில் உள்ள வார்த்தையை நீக்கக்கோரி தென் மாவட்ட மாநாட்டு வகுப்பு தமிழ் விஸ்வகர்ம உறவின்முறை சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பத்தாம் வகுப்பு தமிழ் பாடநூலில் சிலப்பதிகாரம் இடம்பெற்றுள்ளது. இதில் மதுரைக்காண்டம் வழக்குரை காதை-யில் 'பொற்கொல்லன் பொய்யான பழியை கோவலன் மீது சுமத்தினான்' என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.
இது பொற்கொல்லர்கள் சமூகத்தை இழிவு படுத்துவதாக இருப்பதாகவும், உடனடியாக இந்த வார்த்தைகளை பாடநூலில் இருந்து நீக்க வேண்டும் எனக்கோரி தென் மாவட்ட மாநாட்டு வகுப்பு தமிழ் விஸ்வகர்ம உறவின்முறை சங்கத்தினர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்தனர்.