நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள தவிட்டுமேடு பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள மதுபானக் கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் இன்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தவிட்டுமேடு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்ட்ட குடும்பங்களாக மக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் தண்ணீர், சாலை, கழிப்பிட வசதி என எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல வருடங்களாக திறந்த வெளியில் மலம் கழித்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது குறித்து அரசுக்கு பலமுறை மனுக்கள் கொடுத்தும் இது நாள் வரையில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தராமல் மாவட்ட நிர்வாகம் அலைகழித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தவிட்டுமேடு பகுதியில் மாவட்ட நிர்வாகத்தால் திடீரென டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடையின் அருகாமையில் பள்ளி மற்றும் அங்கன்வாடி உள்ளது. இதனால், டாஸ்மாக் மதுபானக் கடையினை உடனடியாக அகற்றி, அந்த கடையின் கட்டிடத்தை கழிப்பறையாக மாற்றி அமைக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.