கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பில் இருந்த 91.61 சென்ட் நிலம் மீட்பு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 91.61 சென்ட் ஆக்கிரமிக்கப்பட்ட மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்க்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி கிராமம், வார்டு எண்.28, எம்.வி சாமி நகர் பகுதியில் அமைந்துள்ள, 10 சென்ட் பரப்பளவும், 80 லட்சம் மதிப்பும் கொண்ட பொது ஒதுக்கீடு இடத்தில், இளங்கோ என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டிருந்த ஷெட் அகற்றி மாநகராட்சி இடம் கையகப்படுத்தப்பட்டது.

மேலும், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட காளப்பட்டி கிராமம், வார்டு எண்.36, வி.ஆர். கார்டன் பகுதியில் உள்ள 34 சென்ட் பரப்பும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட, வீரகேரளம் கிராமம், வார்டு எண்.18, மகாராணி அவன்யூ -1 எக்ஸ்டென்சன் பகுதியில் உள்ள 33.16 சென்ட் பரப்பு மற்றும் வார்டு எண்.19 சிவகாமி நகர் பகுதியில் உள்ள 9.45 சென்ட் பரப்பும், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி கிராமம், வார்டு எண்.100, ஹவுசிங் யூனிட்டில் 5 சென்ட் பரப்பும், ஆகமொத்தம் 91.61 சென்ட் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு பகுதிகள் சுத்தம் செய்து, பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.25 பூமார்க்கெட் பகுதியல் உள்ள சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமையும் பொது ஒதுக்கீடு சம்பந்தமாக, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் அடிப்படையில் நகரமைப்பு பிரிவில் பணிகள் மேறக்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...