ஈஷா-வுடன் இணைந்து 50 கோடி மரம் நடும் மகாராஸ்டிர வனத்துறை

மகாராஷ்டிரா மாநில வனத்துறை மற்றும் ஈஷா அறக்கட்டளை கடந்த ஜூலை 1ம் தேதியன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதில் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, மகாராஷ்டிரா நிதி மற்றும் வனத்துறை அமைச்சர் சுதிர் முகந்திவர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் பலர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையழுத்திடப்பட்டது.



2017இல்  தொடங்கி அடுத்த 3 வருடங்களுக்குள் மகாராஷ்டிரத்தில் 50 கோடி மரங்கள் நட்டு மகாராஷ்டிரத்தின் பசுமை போர்வையை கணிசமாக அதிகரிக்கும் பொருட்டு இவொப்பந்தம் கையழுத்திடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பசுமைப்போர்வை அதிகரிப்பு திட்டத்தின் கீழ் குறிப்பாக கோதாவரி நதி வெள்ளப்பெருக்கு பகுதியில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டு அதிக அளவில் மரங்கள் நடப்படவுள்ளது.



தென்னிந்தியாவில் பசுமைப்போர்வையை அதிகரித்ததில் வெற்றிகரமாக விளங்கிக்கொண்டிருக்கும் ஈஷா அறக்கட்டளை இத்திட்டத்தில் மகாராஷ்டிரா அரசுக்கு ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப பங்காளியாக இருக்கும். மகாராஷ்டிரா அரசு, ஈஷா அறக்கட்டளையின் ஆலோசனை மற்றும் உள்ளீடு மூலம் 3 வருடங்களில் 50 கோடிமரங்களை (2017இல் 4 கோடி மரங்கள், 2018இல் 13 கோடி மரங்கள் மற்றும் 2019இல் 33 கோடி மரங்கள் என்ற விகிதத்தில்) நட்டு வளர்க்க உள்ளது. மகாராஷ்டிரா வனத்துறை ஈஷா அறக்கட்டளையின் பசுமை கரங்கள் திட்டத்தின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தின் துணையோடு இத்திட்டத்திணை வழிநடத்தும்.

மேலும் ஈஷா அறக்கட்டளை மத்திய பிரதேசத்தில் "நர்மதா நதி புத்துயிரூட்டல்" திட்டத்தின் கீழ் "நமாமி நர்மதே" மற்றும் "நர்மதா சேவா யாத்ரா" போன்றவற்றில் மத்திய பிரதேச அரசுடன் பணியாற்றி வருகிறது.



மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இம்முயற்சியை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த மாநாடு விழாவில் பங்கேற்ற மகாராஷ்டிரா முதலமைச்சர் "இம்முயற்சியில் மகாராஷ்டிரம் முன்னோடியாக திகழும் "என்றும், "நதிகளை நாம் காக்கவில்லை என்றால் நம்மை யாரும் காப்பாற்ற முடியாது", என்றும் கூறினார்.



சத்குரு கூறுகையில், நாம் நமது நீர் மற்றும் நிலத்தின் நிலை குறித்து போதிய கவனம் கொடுக்கவில்லை என்பதால் தான் இந்த வளங்கள் குறைந்த கொண்டு இருக்கின்றன. நாம் சேதம் ஏற்படுத்தியுள்ளோம் என்றால் நம்மால் அதை சரி செய்யவும் முடியு ம்என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் மாற்றம் உருவாக்கம் பொருளாதாரத்திட்டம் வேண்டும். நாம் சரியான வகை மரங்கள் நட்டு வளர்ப்பதன் மூலம் நம் விவசாயிகளின் வருமானத்தை 5 வருடங்களில் 300- 800 சதவிகிதம் அதிகரிக்க முடியும்" என்றார்.

ஈஷாவின் பசுமைக்கரங்கள் திட்டம் தமிழகத்தில் 30 லட்சம் தன்னார்வத் தொண்டர்களுடன் 3 கோடிக்கும் மேல் மரம் நட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...