கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் 47வது நிறுவனர் தின விழா மற்றும் தொலைதூர கல்வி இயக்கத்தில் படித்த 60 பேருக்கு பட்டங்கள் வழங்கும் விழா ஆகியவை இன்று கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் பொது இயக்குனர் அய்யப்பன் கலந்து கொண்டு இளநிலை பண்ணை தொழில் நுட்பம் படித்த விவசாயிகளுக்கு பட்டங்களை வழங்கினார். விவசாயிகளுக்காக நடத்தப்படும் இந்த பாடப்பிரிவில் இது வரை 332 விவசாயிகள் பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் 25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களை பாராட்டி பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பல்கலைகழக துணைவேந்தர் ராமசாமி மற்றும் பேராசியர்கள், துறைத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.