ஜிஎஸ்டி வரி குறித்து கோவையில் விழிப்புணர்வு பேரணி

ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை வணிகவரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று பதாகைகளை ஏந்தியவாறு பேரணி சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப்பட உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு பற்றி பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜிஎஸ்டி குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் கோவை வணிகவரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்று பேரணியில் ஈடுபட்டனர்.



கோவை பாலசுந்தரம் சாலையில் செயல்பட்டு வரும் வணிகவரித்துறை அலுவலகத்திலிருந்து துவங்கிய இந்தப் பேரணி வஉசி பூங்கா வரை சென்று நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் வரி செலுத்துவோர் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...