நீட் தேர்வு முடிவுகளின் படியே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் - புதிய தமிழகம் கட்சி தலைவர்

நீட் தேர்வு முடிவுகளின் படியே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் எனவும், மாநில கல்வி முறையில் படித்தவர்களுக்கு 85 சதவிகிதம் சிபிஎஸ்சி பாட பிரிவில் படித்தவர்களுக்கு 15 சதவிகிதம் என்ற சுகாதார துறையின் தற்போதைய நடவடிக்கை தவறானது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்

கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இளநிலை முதுநிலை மருத்துவபடிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்வின் முடிவுகள்படி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். மாநில கல்வி முறையில் படித்தவர்களுக்கு 85 சதவிகிதம் சிபிஎஸ்சி பாடபிரிவில் படித்தவர்களுக்கு 15 சதவிகிம் என்ற சுகாதார துறையின் தற்போதை நடவடிக்கை என்பது தவறானது. நீட் தேர்விற்கான சட்டவிதிகளை மதிக்காமல் யாரையோ திருப்திபடுத்த இந்த நடைமுறை கொண்டு வரப்படுகின்றது. 

சுகாதாரதுறையின் இந்த புதிய முறை தொடர்பாக யார் வழக்கு தொடுத்தாலும் இந்த நடைமுறை தடைபடும். நீட் விதிமுறைப்படியே மாணவர்களை தேர்வு செய்யவேண்டும்.

இந்தியா முழுவதும் ஒரே விதமான வரி என்பது பாராட்டத்தக்கது. ஜிஎஸ்டி வரியால் சாதகங்கள் அதிகமே தவிர பாதகங்கள் பெரிய அளவில் இருக்காது. ஜிஎஸ்டி-யை மத்திய அரசு மக்களிடம் விளக்க வேண்டும். வணிக நிறுவனங்கள் தேவையின்றி ஜிஎஸ்டி வரியை பார்த்து அச்சப்படத் தேவையில்லை. 

தமிழக அரசு மணலை நேரடியாக விற்பனை செய்வதாக தெரிவித்தது இதுவரை முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. ஒரு லோடு மணல் ரூ.50 ஆயிரத்திக்கு விற்பனையாவதால் கட்டுமான தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றது. அரசே மணல் விற்பனையை துரிதப்படுத்தவேண்டும். ஜிஎஸ்டி வரியால் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கும், வணிகர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. ஜிஎஸ்டி வரி விதிப்பானது எந்த தொழிலையாவது முடக்கும் என்றால் முதல் குரலாக புதிய தமிழகம் கட்சியின் குரல் இருக்கும். ஜிஎஸ்டி-யை கொள்கை ரீதியாக அனைவரும் ஏற்க வேண்டும். தரமான பொருட்களை உறுதி செய்யவும், தரமான பொருட்கள் கிடைக்கவும் இது உதவும்" என்றார். 

இதனைத்தொடர்ந்து, சட்டமன்றத்தில் திமுக தினமும் வெளிநடப்பு செய்துவருவது தொடர்பான பத்திரிகையாளர் கேள்விக்கு, சட்டமன்றத்தில் பேசினால் கூட பதிவு செய்யப்படாத நிலை இருந்து வருகின்றது. சட்ட சபையில் வெளிநடப்பு என்பது தவிர்க்க இயலாதது'.

இவ்வாறு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...