கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 21-வது வார்டுக்குட்பட்ட சுண்டப்பாளையம் ரோடு, பனைமரத்தூர் பகுதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அதேப் பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்தினை ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதையும் ஆய்வு செய்தார். பின், பனைமரத்தூர் பகுதியில் வாரம் தோறும் புதன்கிழமை மட்டும் மக்காத குப்பை சேகரிக்கும் பணியினையும், குமாரசாமி காலனி பகுதியில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மழை நீர் வடிகால் பணிகளையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது, உதவி ஆணையர் ராமைய்யா, உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.