கோவை மாநகராட்சியில் மே மாதம் 1-ம் தேதி முதல் 50 மைக்ரான் அளவு தடிமனுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கடந்த ஜூன் 17 முதல் ஜூன் 23 ம் தேதி வரை 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 610 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் மொத்தம் 3477 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இன்று (ஜூன் 23) பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் ரூ.1,11,050 விதிக்கப்பட்டது.
இதுகுறித்து, கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், “ கோவை மாநகராட்சி நகர்நல அலுவலர், மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழு மாநகராட்சியின் 5 மண்டல வார்டு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளில் கடந்த மே மாதம் முதல் ஆய்வில் ஈடுபட்டு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அபராதம் விதித்து வருன்றனர்.
அதன் படி, கடந்த ஜூன் 17 முதல் இன்று 23ம் தேதி வரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விநியோகம் குறித்து மண்டலங்களிலும் ஆய்வு செய்ப்பட்டது. அப்போது, 610 கடைகளில் 3477 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு இன்று பறிமுதல் செய்யப்பட்டு, அபராதத் தொகை ரூ.1,11,050 விதிக்கப்பட்டது.
மேலும், இந்த ஆய்வுப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள், வணிக சங்கங்கள், வியாபாரிகள், கடை உரிமையாளர்கள், சிறு மற்றும் பெரு வியாபாரிகள் மாநகராட்சியின் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.