காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீராகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு மாநில கட்சி தலைவர்களையும் தொடர்பு கொண்டு பாஜக ஆதரவு கோரி வருகிறது.
வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து பாஜக தலைவர்கள் ஆதரவு கோரினார்கள். மேலும் தங்களுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வாய்ப்பில்லை என்றும் பாஜக-வினர் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டன. அப்போது, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார்.