தமிழ்நாடு அரசினர் வேலை மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்கள் சேர்க்கை கலந்தாய்வு வரும் 23ம் தேதியன்று துவங்கப்பட உள்ளது.
கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் ஜூன் 23ம் தேதியன்று அனைத்து சிறப்பு இன பயிற்சியாளர்களுக்கும், 24ம் தேதியன்று எட்டாம் வகுப்பு தேர்ச்சி தகுதிபடைத்த தொழிற்பிரிவுகளுக்கும், ஜூன் 27 மற்றும் ஜூலை 1ம் தேதி வரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி தகுதிபடைத்த பொறியியல் தொழிற்பிரிவுகளுக்கும் மற்றும் ஜூலை 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளுக்கும் நடைபெற உள்ளது.
விண்ணப்பித்த பயிற்சியாளர்கள் இந்தியன் வங்கியில் விண்ணப்பக் கட்டணம் செலுத்திய அசல் செலுத்துச் சீட்டு மற்றும் அசல் கல்வி மற்றும் ஆவணங்களுடன் காலை 8 மணிக்கு நிலையத்தில் ஆஜராக வேண்டும்.
இதுகுறித்த விபரங்களுக்கு விண்ணப்பம் சமர்ப்பித்த இணைய தள முகவரி www.skilltraining.tn.gov.in/DET-யில் காணலாம். மேலும், விபரங்களுக்கு தொலை பேசி எண் 0422 2642041 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.