கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அலுவலக உதவியாளர்கள் பணிக்கான நேர்முகத் தேர்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டத்தில் வருவாய் துறையில் காலியாக உள்ள 22 அலுவலக உதவியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கக் கோரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
இதனையடுத்து இந்த பணியிடங்களுக்கு 2619 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தகுதியானவர்கள் என 1322 பேர் தேர்வு செய்யப்பட்டு நேர்முக தேர்விக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது. உதவி ஆட்சியர் நிலையில் உள்ள 7 அதிகாரிகள் இந்த நேர்முக தேர்வை நடத்தி வருகின்றனர். அலுவலக உதவியாளர் பணியில் உள்ள 22 காலி பணியிடங்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேர்முக தேர்வில் பங்கேற்க வந்துள்ளனர்.