நீலகிரி மாவட்டம் கோடநாடு காட்சிமுனையில் பள்ளிகள் திறந்த பின்னரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கோடநாடு காட்சி முனையினைக் காண நாள் தோறும் நூற்றுக்கணக்கானோர் குவிந்து வருகின்றன.
இங்கிருந்து பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள், தெங்குமராடாவின் வயல்வெளிகள், பவானியில் கலக்கும் மாயாரின் அழகு என கண்ணைக் கவரும் வகையில் இயற்கை காட்சிதரும்.
இதனிடையே, கோடநாடு காட்சிமுனைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான பகுதிகளுக்கு செல்லாமல் இருக்க வனத்துறையின் சார்பில் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்கள் அதனை மிறி புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வேலி அமைத்தும் அதைத் தாண்டி செல்வது ஆபத்தை விளைவிக்கும். எனவே வேலிகளை தாண்டி செல்லவேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.