அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக பிரதிபலிக்கும் என்று கோவையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு உற்சாகமாக நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர், பல கருத்துக்கணிப்புகளும் NDA-வின் முன்னிலை குறித்து ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்தார். திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக பிரதிபலிக்கும் என்றும், மாற்றத்திற்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

mAnypN3mfQkYmS3PH6cdnFvV1ptg4bFVR49OnHT0.jpg

தமிழகத்தில் ‘டபுள் இன்ஜின்’ அரசு அமைந்தால் மாநில வளர்ச்சிக்கு புதிய திசை கிடைக்கும் எனவும், மக்களின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும் எனவும் தெரிவித்தார். மேலும், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் எதிர்பார்ப்புகளை மீறி பாஜக வெற்றி பெற்றதை நினைவுகூர்ந்த அவர், தமிழக அரசியலிலும் பெரிய மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துத் துறை ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ஊழல் சம்பவங்கள் விசாரணைகள் மூலம் வெளிச்சத்துக்கு வரும்; சட்டம் தனது கடமையைச் செய்யும்” என்றார்.

அதேபோல், அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, “நிச்சயம் வழங்கப்படும்” என உறுதியான பதில் அளித்தார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...