அறிவியல் கண்காட்சி ரயில் தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் உள்ள ஆத்தூர் மற்றும் கரூர் ரயில் நிலையங்களுக்கு வருகை

அறிவியல் பற்றி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு மற்றும் ஈடுபாடு உண்டாக்கும் பொருட்டு, இந்திய ரயில்வேயும், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையும் இணைந்து, அக்டோபர் 2007 முதல் அறிவியல் ரயிலை இயக்கி வருகின்றன.



இதுவரை நாடெங்கும் 8 முறை சுற்றி வந்துள்ள அறிவியல் ரயில் 1,53,00 கிலோ மீட்டர் பயணம் செய்து 495 ரயில் நிலையங்களை சென்று வந்துள்ளது. மிக அதிக தொலைவு பயணம் செய்த மற்றும் அதிகமானோர் கண்டு களித்துள்ளதாக லிம்கா சாதனைப் புத்தகத்தில் அறிவியல் ரயில் 12 முறை இடம் பெற்றுள்ளது. இம்முறை பருவச்சூழல் மாறுபாடு பற்றிய சிறப்பு ரயிலாக இயக்கப்படும் அறிவியல் ரயில் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி, புதுதில்லி சப்தர்ஜங் ரயில்நிலையத்தில் இருந்து மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் திரு. சுரேஷ்பிரபு அவர்களால் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டு, இம்முறை நாடெங்கிலும் 19,000 கிமீ பயணித்து சேலம் கோட்டத்தின் ஆத்தூர் மற்றும் கரூர் ரயில் நிலையங்கள் உட்பட 68 ரயில்நிலையங்களுக்கு வருகை தர உள்ளது.  



புதுச்சேரியில் கண்காட்சியை முடித்த பிறகு, 17.06.2017 அன்று இந்த பருவச்சூழல் சிறப்பு அறிவியல் ரயில் ஆத்தூர் ரயில் நிலையத்தில் 19.06.2017 வரையும், பின்னர் 20.06.2017 முதல் 22.06.2017 வரை  கரூர் ரயில் நிலையத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு அதன் பின்னர் கொடைக்கானல் ரோடு புறப்பட்டு செல்லும். காட்சி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.



13 ரயில் பெட்டிகளில் சுற்றுச்சூழல் மாறுபாடு பற்றிய பல்வேறு காட்சிப் பொருட்களும், மீண்டும் பயன்படுத்தக் கூடிய சக்தி, பயோடொக்னாலஜி, சிறுவர்களுக்கான சிறப்பு கண்காட்சிப் பெட்டி மற்றும் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு அறிவியல் சோதனைகளை நேரில் செய்து பார்க்கும் சோதனைக்கூடம் போன்றவையும் இருக்கும். சூரிய மின்சக்தியை பயன்படுத்தும் வகையில் 3 ரயில் பெட்டிகளில்  சூரிய மின்சக்தி பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.  

ஆத்தூர் ரயில்நிலையத்தில் 17.06.2017 அன்று காலை சுமார் 11.30 மணியளிவில் இந்த அறிவியல் ரயில் கண்காட்சியை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்கள் துவக்கி வைக்கிறார்.  

ரயில்பெட்டிகளில் உள்ள காட்சிப் பொருட்கள் குறித்து விளக்க ஒவ்வொரு ரயில்பெட்டியிலும் தன்னார்வலர்கள் மாணவ மாணவியரின் சந்தேகத்தை தீர்த்து வைப்பார்கள். இந்த அறிவியல் ரயில் பற்றி மேலும் தகவல் அறிய http://www.sciencexpress.in/ என்ற இணையதளத்தை பார்க்கலாம். அல்லது +91 9428405407/+91 9428405408  என்ற எண்களை தொடர்பு கொள்வதுடன், [email protected]/[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியும் தகவல் பெறலாம்.  முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்பதால் பள்ளிகள் மற்றும் இதர நிறுவனங்கள் மேற்கொண்ட எண்களில் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை முன்னதாகவே பதிந்து கொள்ளலாம்.   ஆத்தூர் மற்றும் கரூர் ரயில் நிலையங்களுக்கு இத்தகு பருவச்சூழல் மாறுபாடு பற்றி விளக்கும் அறிவியல் ரயில் வருகை தருவது முதன் முறை என்பதால் இப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் மாணவிகள் இந்த கண்காட்சியை சிறப்பாக பயன்படுத்தி தங்களுடைய அறிவை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  



இந்த அறிவியல் கண்காட்சி ரயிலுக்கு வருகை தருவோர் கீழ்க்கண்ட முக்கிய நடைமுறைகளை கவனத்தில் கொள்ளவும்.

இந்த கண்காட்சி ரயிலில் அனைவருக்கும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி உண்டு.

இந்த கண்காட்சி ரயிலுக்கு நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை.

ரயிலின் உள்ளே வரும் போது, அலைபேசி, கேமரா, பைகள், தீப்பெட்டி, சிகரெட், பீடி, தண்ணீர் பாட்டில்கள், இதர நீர்மங்கள் (liquids), கூர்மையான பொருட்களை வைத்திருந்தால் அனுமதி மறுக்கப்படும். எனவே, அவற்றை தங்களுடன் வைத்திருக்க வேண்டாம் என சேலம் தெற்கு ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...