கல்லீரல் அறுவை சிகிச்சையை சிறப்பிக்க ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, சென்னை கிளானிகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியுடன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

கோவை, அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை உயர்தர சிகிச்சை, சரியான கட்டணத்தில் நோயாளிகளுக்கு கடந்த 40 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வருகிறது. இந்த மருத்துவமனை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள, சென்னையில் உள்ள, சர்வதேச அளவில்  கல்லீரல் மாற்று சிகிச்சையில் சிறந்து விளங்கும் பேராசிரியர் முகமது ரெலா தலைமையிலான குழு உள்ள கிளேனிக்கல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

கோவை ரெஸிடென்ஸி ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசாமி கிளோனிக்கல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை கல்லீரல் மாற்று பிரிவு இயக்குனர் பேராசிரியர் முகமது ரேலா பங்கேற்றனர்.

தொடர்ந்து நடந்த கருத்தரங்கில், கிளோனிக்கல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவர்கள் தினேஷ் ஜோதிமணி, இளங்குமரன் கலியமுர்த்தி, ராஜேஷ் ராஜலிங்கம், ஆனந்த் பரதன் ஆகியோர் பங்கேற்றனர். ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக, மருத்துவமனை அறுவை சிகிச்சையின் போதும், அறுவை சிகிச்சைக்கு பின்னரும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள நிபுணர்களுக்கு பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் படிப்படியாக அளிக்கப்படும். கல்லீரல் சிகிச்சை, மயக்கவியல், கல்லீரல் தீவிர சிகிச்சை, கல்லீரல் மாற்று சிகிச்சை, குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று சிகிச்சை, தொற்று நோய்களுக்கான மாற்று சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தொழில்நுட்பங்களை வழங்கும்.

அறுவை அரங்கில் பணியாற்றும் செவிலியர்கள், தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர்கள், வார்டு செவிலியர்கள் ஆகியோருக்கும் சென்னை குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் பயிற்சிகள் தரப்படும். படிப்படியான, நிலையான கல்லீரல் மாற்று சிகிச்சை தொழில்நுட்பங்கள், ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு மாற்றப்படும். கல்லீரல் பிரிவில் பாதுகாப்பான, சிறப்பான சிகிச்சை தரும் மருத்துவமனையாக இந்த ஒப்பந்தத்தால் மாற்றம் பெறும்.

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை விரைவில் உலகில் தலைசிறந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பெயர் பெற்றதாக மாறும். இந்த மண்டலத்தில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் சிறப்பான, தரமான, சரியான கட்டணத்தில் மருத்துவ சேவையை தருவதாக அமையும்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...