தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக் கண்டித்து கோவை முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என்பவ உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை டவுண்ஹால் பகுதியில் கண்களை கட்டிக்கொண்டு ஊர்வலமாக வந்த இந்திய மாணவர் சங்கத்தினர் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதை தொடந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்க அனுமதிக்குமாறு காவல் துறையினரிடம் மறையிட்டனர்.
ஆனால், காவல் துறையினர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலகத்திற்குள் இந்திய மாணவர் சங்கத்தினர் நுழைய முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகளை காவல் துறையினர் கைது செய்தனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக டவுண்ஹால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.