நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகில் மூன்று காட்டு யானைகள் 2 குட்டிகளுடன் இன்று முகாமிட்டுள்ளன. அப்பகுதியில், ஒரு வீட்டின் தடுப்பு வேலியை உடைத்து வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வந்த இந்த யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

