கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி குறித்த சோதனை தீவிரம்: உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரி பேட்டி

கடந்த சில நாட்களுக்கு முன் மேற்குவங்காளத்தில் பிளாஸ்டிக் அரிசி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதில் சமைக்கும் உணவு ரப்பர் போன்று இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது.

இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. புகாரை தொடர்ந்து தெலுங்கானா மாநில உணவுப்பொருள் வழங்குதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பிளாஸ்டிக் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

உணவு பொருட்களில் பிளாஸ்டிக் கலப்படம் செய்யப்படுவதால், செரிமானக் கோளாறு போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படக்கூடும். மேலும், உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும். ஆனால், ‘தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று’ உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார். இருந்த போதும், தமிழக மக்கள் பிளாஸ்டிக் அரிசியால் அச்சம் கொண்டுள்ளனர்.

பிளாஸ்டிக் அரிசி குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு குழு அமைத்துள்ளது. மளிகை கடைகளில் பிளாஸ்டிக் அரசி விற்பனை செய்யப்படுகிறதா? என்று தமிழகம் முழுவதும் 485 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பாக 9444042322 என்ற என்னிக்கு அழைத்து புகார் அளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை குறித்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜய் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சிம்ப்ளி-சிட்டிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:- பிளாஸ்டிக் அரிசி விவகாரம் தொடர்பாக கடந்த 8-ம் தேதி தொடங்கி தொடர்ந்து மூன்றாவது நாளாக சோதனை நடத்தி வருகிறோம். கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரிசி மண்டிகள், மளிகை கடைகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 29 உணவு பாதுகாப்பு அலுவலர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 16 இடங்களில் இருந்து அரசி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பியுள்ளோம். கோவையில், இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் பிளாஸ்டிக் அரசிகள் எதுவும் சிக்கவில்லை. பொதுவாக தமிழகத்தில் அரசி உற்பத்தி மிக அதிகம், அதனால் இங்கு பிளாஸ்டிக் அரசி வருவதற்கு வாய்ப்பு இல்லை. கோவைக்கு காங்கேயம் போன்ற பல பகுதிகளில் இருந்து அதிகப்படியான அரிசி கிடைக்கிறது. தேவைக்கும் அதிகமான அளவில் இங்கு அரிசி இருப்பதால் கோவையில் பிளாஸ்டிக் அரிசிக்கு இடமில்லை. பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பாக பொதுமக்கள் எங்களுக்கு புகார் அளிக்கலாம். புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் விஜய் தெரிவித்தார்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...