நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து உதகை செல்லும் சாலை வழியாக பெட்ரோலிய நிறுவன லாரி வந்துகொண்டிருந்துள்ளது. அப்போது, உதகை சாலையில் அமைந்துள்ள சனிபகவான் கோவில் அருகே பெட்ரோலிய லாரி நிலை குலைந்து எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சாலையில் கவிழ்ந்த லாரியினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக, லாரியில் இருந்து சாலையில் கொட்டிய பெட்ரோலை பொதுமக்கள், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் என பலரும் பிடித்து சென்றனர்.
இந்த விபத்து காரணமாக கூடலூர்- உதகை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.