கோவையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக விவசாயிகள் சங்கத்தினர் புகார்

கோவையில் மாதம்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், இதுபோன்று தொடரும் பட்சத்தில் 21 விவசாயிகள் சங்கத்தை ஆலோசித்து தலைமை செயலாளரை சந்திக்க முடிவு எடுக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் பாதியிலேயே சென்றதால், விவசாயிகள், அதிகாரிகளுடன் காரச்சார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கந்தசாமி கூறியதாவது:-

மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அரசாணை இருந்தும், முடிவு எடுக்க வேண்டிய அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பது விவசாயிகள் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படுவதில் மெத்தனம் காட்டுவதாக உள்ளது.



மேலும், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். இதுபோன்று தொடரும் பட்சத்தில் 21 விவசாயிகள் சங்கத்தை ஆலோசித்து தலைமை செயலாளரை சந்திக்க முடிவு எடுக்கப்படும்.

கோவையில் தென்னை, வாழை, காய்கறி உள்ளிட்டவை சாகுபடி அதிகளவு இருந்தும் அவற்றிற்கு பயிர் காப்பீடு வழங்கப்படாதது காப்பீடு நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படும் வகையில் உள்ளது. வறட்சி நிவாரணம் வழங்கப்படும் விவசாயிகள் பட்டியலை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஒட்டப்பட வேண்டும். கணினியில் பட்டா பூமி தொடர்பாக தவறான தகவலை வேண்டுமென்று பதிவேற்றம் செய்யும் அதிகாரிகள் மீது ஆதாரத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோவை மாவட்ட விவசாயிகள் சார்பாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் கந்தசாமி தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...