வாக்காளர் அடையாள அட்டைக்கு ஜூலை 1 முதல் 31 வரை சிறப்பு முகாம் நடைபெறும்

கோவை மாவட்டத்தில் விடுபட்ட வாக்காளர்களை குறிப்பாக 18 வயது முதல் 21 வயதுடைய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமின் போது இரண்டு சிறப்பு முகாம்களை நடத்தவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2017 ஜூலை 1 முதல் 2017 ஜூலை 31 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் விண்ணப்பப் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

2017 ஜனவரி 1ம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், ஏற்கனவே உள்ள சட்டமன்ற தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுடையவர்கள் ஆவர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7, பெயர் மற்றும் முகவரி திருத்தங்கள் மேற்கொள்வதற்கு படிவம் 8 மற்றும் குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதியின் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ ஆகியவற்றை பயன்படுத்த www.elections.tn.gov.in என்னும் வலைதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...