டாக்டர். கலாம் நூலகம் சார்பில் 2-வது மெகா புத்தக நிகழ்ச்சி கோவையில் துவக்கம்


கோவையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஆர்க் தன்னார்வ அமைப்பு, கோவை மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. கோவை, கூடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆர்க் தன்னார்வ அமைப்பில் 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் செயலாற்றி வருகின்றனர்.

ஸ்வச் பாரத் ஸ்வச் சர்வேக்ஷன் வித்யாலயா, உடலுருப்பு தானம், ஸ்ரீ சத்குரு ஆதிவாசி பள்ளி- கல்லார், மருத்துவ உதவி, பெண்கள் மற்றும் திருநங்கைகள் மேம்பாடு என பல்வேறு துறைகளிலும் ஆர்க் தன்னார்வ அமைப்பு பணியாற்றி வருகிறது. 



அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சியுடன் இணைந்து ஆர்க் அறக்கட்டளை, 100 அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் டாக்டர் கலாம் என்னும் நூலகம் அமைத்து மாணவர்களின் பயிலும் திறமையை மேம்படுத்தி வருகிறது.

இந்த நூலகத்தின் சார்பில் இன்று 2-வது மெகா புத்தக நிகழ்ச்சி கோவை புரூக்ஃபீல்டு வணிகவளாகத்தில் துவங்கியது. இந்நிகழ்ச்சி இன்று முதல் வரும் ஜூன் 4ம் தேதி வரை நடைபெறும்.



இந்நிகழ்ச்சியின் மூலம் பழைய மற்றும் புதிய புத்தகங்களை சேகரித்து டாக்டர் கலாம் நூலகம் மூலம் நூறு அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து மேலும் தகவலுக்கு +91-9364123123, +91 -9791985668, +91-9943951411 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். அல்லது u :[email protected] என்ற இணையதள பக்கத்திலும் தொடர்பு கொள்ளலாம்.

புத்தகங்களை தானமாக வழங்க முன்வருவோர் +91-9364123123 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கும்பட்சத்தில் இருக்கும் இடத்திற்கே வந்து புத்தகங்கள் பெறப்படும்.

இதுகுறித்து ஆர்க் அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரான அபர்னா கூறுகையில், டாக்டர் கலாம் நுலகம் சார்பில் கடந்த வருடம் முதல் புத்தக நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று நடைபெற்ற இரண்டாவது புத்தக நிகழ்ச்சியில் 150 புத்தகங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், வீட்டிற்கே சென்று புத்தகங்களும் சேகரிக்கப்பட்டன. பெரும்பாலும் முதியோர்களே இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு இலவசமாக புத்தகங்களை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, அடுத்த வாரம் முதியோர்கள் கதை சொல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில், முதியோர்கள் தை சொல்லும் போது வீடியோவாக பதிவு செய்து பள்ளிகளுக்கு  அனுப்பப்படவுள்ளது. இதன் மூலம், பழைய பாரம்பரிய கதைகளை புதிய பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்வர்" என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...