மீண்டும் கழிவு நீரால் தேங்கிய கிக்கானி மேம்பாலம் மாநகராட்சி புதிய முயற்சி மேற்கொள்ளுமா?

கோவையில் மழை பெய்தால் மட்டுமே கிக்கானி பள்ளி அருகே உள்ள ரயில்வே தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கும். ஆனால் சாக்கடை கழிவு நீரால் தரைபாலம் முழுவது நிரம்பி வழிந்தது. இதனால் போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. இந்த பாலத்தின் அருகே உள்ள பாதாள சாக்கடைக் குழாயில் தொடர்ந்து ஒரு மாதமாக தினமும் கழிவுநீர் உடைப்பெடுத்து வருகிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும்போது பொங்கிப் பெருகும் கழிவுநீர், பாலத்தில் அடியில் தேங்கி வாகனங்களை மூழ்கடித்து வருகிறது. அங்குள்ள மக்கள் பல முறை புகார் தெரிவித்தும் நிரந்தரமான தீர்வுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.



இதன் விளைவு, முன்தினம் ஞாயிறு அன்று காலை 10 மணியளவில் வழக்கம்போல பாதாளச் சாக்கடை குழாயில் இருந்து வெளியேறிய கழிவு நீர், மேல்பக்க மூடியை திறந்து கொண்டு பெருக்கெடுத்தது. அடுத்த அரை மணி நேரத்தில் ரயில்வே பாலம் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கத் தொடங்கியது. காலை 11 மணியளவில் பாலம் முழுவதும் கழிவுநீரால் மூழ்கியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. பிரச்சினை அதிகமாகிவிட்டதால், உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் குழாய் உடைப்பை சரிசெய்வார்கள் என மக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் மாநகராட்சி தரப்பில் இருந்து யாரும் வராததால் வேறு வழியின்றி போலீஸார் அந்த சாலையை அடைத்தனர். 



பின்னர், ஞாயிறு அன்று மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் சரிசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று கோவையில் பொய்த மழையால் காலையில் மழைநீர் அப்பகுதியில் தேங்கியது. 11 மணியளவில் மீண்டும் அந்த சாக்கடை கழிவு நீர் வெளிவர ஆரம்பித்தது. மீண்டும் சுகாதார அலுவலர்களால் மோட்டர் மூலம் கழிவு நீரை உறிஞ்சி அப்புறப்படுத்தினர். பாதாள சாக்கடைக் குழாய் அடைப்பை சரி செய்வதோடு, ரயில்வே பாலத்தின் கீழே மழைநீர் வடிகால் அமைத்தால் மட்டுமே இப்பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க முடியும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.



இது குறித்து மேற்கு மண்டல சுகாதார அலுவலரிடம் தொடர்பு கொண்டபோது; ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது அருகில் உள்ள பகுதிகளில் உள்ள மண் மற்றும் குப்பை இந்த பலத்திற்கு செல்வதால் மழைநீர் வடிகாலில் மண் தேங்கி நிற்கின்றது. இதனால் மழைநீர் இப்பகுதியில் தேக்கம் ஏற்படுகிறது. பலத்தின் இந்த வேலைக்கான பணிகள் மேற்கொள்ள ரயில்வே துறையிடம் அனுமதி கோரவேண்டும். இல்லையென்றால், தற்போது பயன்படுத்தப்படும் மோட்டர் மூலம் மட்டுமே மழைநீரை வெளியேற்ற முடியும். புதிய முயற்சியாக தற்போது லங்கர் கார்னர் பாலத்தில் மழைநீர் வடிகால் வேலை நடைபெறுவதை போல் இங்கும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...