பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராகாததால் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, நடிகை ஸ்ரீபிரியா உட்பட எட்டு நடிகர்களுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகர் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, சேரன், அருண் விஜய், விவேக், விஜயகுமார், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசினர்.
இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் எட்டுபேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ரொசாரியோ என்பவர் நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் மேற்குறிப்பிட்ட நடிகர்கள் ஆஜராகவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு நீலகிரி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையிலும், அந்த எட்டு நடிகர்களும் ஆஜராகவில்லை. இதையடுத்து, சத்யராஜ் உள்ளிட்டு 8 நடிகர்களின் மீதும் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.