நீலகிரி நீதிபதி அதிரடி: சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்டு 8 நடிகர்களுக்கு பிடிவாரன்ட்

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராகாததால் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, நடிகை ஸ்ரீபிரியா உட்பட எட்டு நடிகர்களுக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகர் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, சேரன், அருண் விஜய், விவேக், விஜயகுமார், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசினர்.

இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் எட்டுபேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ரொசாரியோ என்பவர் நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு  வரும்போதெல்லாம் மேற்குறிப்பிட்ட நடிகர்கள் ஆஜராகவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு நீலகிரி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையிலும், அந்த எட்டு நடிகர்களும் ஆஜராகவில்லை. இதையடுத்து, சத்யராஜ் உள்ளிட்டு 8 நடிகர்களின் மீதும் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...