வனச்சகர அலுவலர் பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா



28 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் நேரடி நியமனம் வாயிலாக பணியமர்த்தப்பட்ட 6 மாநிலங்களை சேர்ந்த 39 வனச்சரக அலுவலர்களுக்கான 2015-17 வனச்சரக பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் விழா கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகத்தில் நடைபெற்றது.

அதிக வனச்சரக அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டுமென்ற நோக்கில் 1948 ஆம் ஆண்டில் மத்திய அரசின் பொறுப்பில் சென்ற கோவை தமிழ்நாடு வன உயிர் பயிற்சியகம் சார்பில் உதவி வனப்பாதுகாவலர் நிலைக்கு கீழ்ப்பட்ட வன அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கும் பொறுப்பை 1990-ஆம் ஆண்டில் மாநில அரசின் பொறுப்புக்கு வந்தது.



அதில் தமிழ்நாடு, கேரளா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், கர்நாடகம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு 18 மாத பயிற்சியானது மத்திய அரசு வகுத்துள்ள பாடத்திட்டத்தின் படியும் 19 பாடங்கள் மற்றும் அதுதொடர்பான பயிற்சி கடந்த 2015 ல் துவஙப்பட்டு, பயிற்சி காலத்தில் நாட்டில் மிக முக்கியமான வன சூழல் பகுதிகளுக்கு 146 நாட்கள் கல்வி பயணம் மேற்கொண்டு வனப்பாதுகாப்பு முறைகள் குறித்து கற்றனர்.

மேலும், 10 நாட்கள் சத்தியமங்கலம் சிறப்பு அதிரடி காவல் படைப்பிரிவிலும் 8 நாட்கள் கோவை மத்திய தனி பாதுகாப்பு காவல் படைப்பிரிவிலும் சிறப்பு அதிரடி பயிற்சி வழங்கப்பட்டது. 2015-17 ஆண்டின் முடிவில் 6 பெண்கள் உட்பட 39 பயிற்சியாளர்களுக்கு வனச்சகர அலுவலர் பயிற்சி நிறைவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.



இந்த சான்றிதழ் வழங்கும் விழாவில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்ட வனத்துறை அலுவலர் ராம சுப்ரமணியன் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.

இதில், கேரள மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் இருந்து 13 பேரும், தமிழகத்தில் இருந்து 5 பேரும், மத்திய பிரதேசத்திலிருந்து 4 பேரும், உத்தரகாண்ட்டில் இருந்து 3 பேரும் மற்றும் கர்நாடகாவில் இருந்து ஒருவரும் என 26 பேர் வனத்துறை அமைச்சரிடம் இருந்து இந்த சான்றிதழை பெற்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...