உதகையில் கோலாகலமாக துவங்கியது 121-வது மலர் கண்காட்சி

உதகையில் ஆண்டுதோறும் கோடைக்காலத்தை முன்னிட்டு மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி உதகை அரசுத் தாவரவியல் பூங்காவில் 121-வது மலர் கண்காட்சி இன்று துவங்கியது. மே 19, 20, 21 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில் பல்லாயிரக்கணக்கான மலர்கள், மலர்களால் அழங்கரிக்கப்பட்ட சிற்பங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்பு மலர்க் கண்காட்சியினை இன்று காலை 9 மணியளவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கிவைத்தார்.



சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இந்த வருடம் மலர் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட உயர்ந்த கோபுரம், அலங்கார வளைவுகள், மாமல்லபுரம் பல்லவர் கால கடற்கரைச் சிற்பம், மலர்களால் வடிவமைக்கப்பட்ட விலங்குகுள், ஹார்பின் ஒருவ வடிவமப்பு என பல வண்ண மலர்களின் அணிவகுப்பால் நிறைந்து காணப்படுகிறது உதகை பூங்கா. மேலும், பல தாவர வகைகளின் அலங்கார அணிவகுப்பு, கொய் மலர்களின் மைதானக் கண்காட்சி என மொத்தப் பூங்காவும் கண்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 



மேலும, சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் விழாவின் மூன்று நாட்களும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உதகை மலர் கண்காட்சியினை முன்னிட்டு இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறைமறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.



முன்னதாக, உதகை 121-வது மலர் கண்காட்சியினை துவக்கி வைத்து தமிழக முதலமைச்சர் பேசியதாவது:-

இயற்கை எழில் கொஞ்சும் உதகை முன்னால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மிகவும் பிடித்தமான இடம். தமிழ்நாட்டில் உயரமான இடமான உதகையில் வாழும் மக்கள் அனைவரும் உயர்ந்த எண்ணங்களையே கொண்டுள்ளீர்கள் என்பதை நினைத்து பெருமை அடைகிறேன். சுற்றுலாவுக்கு உகந்த, அமைதியான, பாதுகாப்பான இடமாக உதகை திகழ்கிறது.



ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மலர்க்கண்காட்சியை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்கின்றனர். உதகையில், 15 கோடி ரூபாய் செலவில் தோடர், இருளர், குறும்பர், கோத்தர், பனியர் மற்றும் காட்டுநாயக்கர் என ஆறு பழங்குடியினத்தவர்களை பெருமைப்படுத்த பழங்குடியினர் பண்பாட்டு மையம் ஆகியவற்றை ஜெயலலிதா அமைத்துக் கொடுத்துள்ளார். 

இந்த மலர்க் கண்காட்சியின் சிறப்பம்சமே பலவகையான மலர்கள் 15,000 தொட்டிகளில் ஒரே இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் மனதை கவரும் வகையில் பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பலவகையான உருவ அமைப்புகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கின்றன. 



இந்த மலர்க்கண்காட்சியின் சிறப்பம்சமாக 25 அடி உயரத்தில், 26 அடி நீளத்தில் மலர்களைக் கொண்டு மகாபலிபுரம் கடற்கரை கோவிலின் உருவமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள நுழைவு வாயில் இம்மலர்க்கண்காட்சிக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. பல வண்ணங்களை கொண்ட மலர்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிய வகை மலர்கள், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் கொய் மலர்களில் ஒன்றான லில்லியம் மலர்களின் தொகுப்புகளின் காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்ளது.

மேலும், மலர்க்கண்காட்சியை ஊக்குவிக்க பல போட்டிகள் நடத்தப்பட்டு சிறந்த தோட்டங்கள் மற்றும் பூங்காக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. சுமார் 150 முதல் 200 போட்டியாளர்கள் வரை இப்போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் இம்மலர்க் கண்காட்சியின் நிறைவு நாளில் தமிழக ஆளுநரால் வழங்கப்பட உள்ளது. 



மேலும், இந்தப் பரிசுகள் தோட்ட ஆர்வலர்களையும், பொதுமக்களையும் ஊக்கப்படுத்துவதாக அமைகிறது. இம்மலர் கண்காட்சிக்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் தோட்டம் அமைத்தல் பற்றிய விழிப்புணர்வை அடைவதோடு பல அரிய வகை பூக்களையும் காண ஏதுவாக உள்ளது.

இக்கண்காட்சியை நல்ல முறையில் ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியர் பொ. சங்கர் மற்றும் தோட்டக்கலைத் துறையினருக்கு மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...