வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் ரேடியோ சிட்டி 91.1 எஃப்எம்-யின் "தாகம் தீர்ப்போம்"

கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரேடியோ சிட்டி 91.1 பொழுதுபோக்கிற்கான பாடல்களை மட்டும் ஒளிபரப்பாமல் தனது பல்வேறு செயல்பாடுகள் மூலம் மக்களுக்கு சேவையினையும் வழங்கி வருகிறது.

அதன்படி, தமிழகம் முழுவதும் நிலவி வரும் வறட்சியால் மக்கள் குடிக்க நீரின்றி தவித்து வரும் நிலையில் அவர்களுக்கான நீர்த்தேவையினை பூர்த்தி செய்யும் விதமாக கோவை மக்களின் தாகம் தீர்க்க களமிறங்கியது ரேடியோ சிட்டி 91.1 எஃப்எம். இதற்காக "தாகம் தீர்ப்போம்" என்னும் திட்டத்தை துவங்கி ரேடியோ சிட்டி அடிமட்ட, குடிசைவாசிகள் வசிக்கும் பகுதிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான தண்ணீரை விநியோகிப்பதே இத்திட்டமாகும்.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக "தாகம் தீர்ப்போம்" அமைப்பினர் வனவிலங்குகளுக்கு தண்ணீர் வழங்கும் பணியினையும் துவங்கியுள்ளனர். அதன்படி, வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றும் பணி நடைபெற்று வருகிறது. 

இப்பணியில், ரேடியோசிட்டியுடன் ஆர்க் பவுண்டேசன் மற்றும் ஸ்யாம்சுந்தர் வாட்டர் சப்பளை ஆகியோரும் இணைந்து தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...