தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோவை காட்டூரில் என்.டி.சி. தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 தேசிய ஜவுளிக் கழக (என்.டி.சி.) ஆலைகளை மீண்டும் இயக்கி தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும், பல மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் என்.டி.சி. ஆலை தொழிலாளர்கள் இன்று புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரதிய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்.) மற்றும் தமிழக பஞ்சாலை தொழிலாளர் சங்கம் இணைந்து, கோவை காட்டூரில் உள்ள என்.டி.சி. தென் மண்டல அலுவலகம் அருகே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

தமிழக பஞ்சாலை தொழிலாளர் சங்கச் செயலாளர் பி. முருகேசன் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்தார். சங்கத்தின் பொதுச்செயலாளர் என். சிதம்பரசாமி மற்றும் பி.எம்.எஸ். மாநில பொதுச்செயலாளர் ஜி. சங்கர் ஆகியோர் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
தமிழ்நாட்டில் என்.டி.சி.யின் கீழ் செயல்பட்டு வந்த 7 ஆலைகளையும் மீண்டும் இயக்கி தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பது ஆர்ப்பாட்டத்தின் போது பிரதான கோரிக்கையாக வைக்கப்பட்டது.
மேலும், 2025 அக்டோபர் 1 முதல் 2026 ஆகஸ்ட் 31 வரை 11 மாதங்களாக பணிக்கு வந்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கு முழு ஊதியத்தையும், வேலை வழங்கப்படாத தொழிலாளர்களுக்கு 50 சதவீத ஊதியத்தையும் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
2023 ஜூலை முதல் 2025 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 50 சதவீத சம்பளம் பெற்று வந்த தொழிலாளர்களுக்கு, 27 மாதங்களாக நிலுவையில் உள்ள 50 சதவீத பாக்கி ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதேபோல், 2024 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரை ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்களையும் தாமதமின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வரும் அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் 50 சதவீத ஊதியம் பெற்று வரும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி வழங்கப்பட வேண்டிய போனஸ் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும், கடந்த 12 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கக் கோரி நிர்வாகத்திடம் முறையிட்ட தொழிலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பழிவாங்கும் நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.எம்.எஸ். மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். கோபால், மாவட்டத் தலைவர் அனில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரங்கவிலாஸ், காளீஸ்வரா, முருகன், பனியர், பயனியர்ஸ் மற்றும் பங்கஜா உள்ளிட்ட பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான என்.டி.சி. தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
முடிவில் ரங்கவிலாஸ் மில்ஸ் நிர்வாகி பெருமாள்சாமி நன்றி தெரிவித்தார்.